அரக்கோணம் அருகே அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை மாவட்டம் காட்பாடி to அரக்கோணம் ரயில் பாதையில் சித்தேரி ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு இடையே சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் மற்றும் சேரன் விரைவு வண்டிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின் தண்டவாள விரிசல் உரிய நேரத்தில் ஊழியர்களால் சரிசெய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 விரைவு ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.