கடன் தொந்தரவால் தனது ஒரே மகனை கொலை செய்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் மனோநகர் பகுதியில் ராஜா-கனகதுர்க்கா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஸ்ரீவத்சன்(11) என்ற மகன் இருந்தார். இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் ரியல் எஸ்டேட் தொழிலும், மற்றொரு புறம் டீக்கடையும் நடத்தி வந்த நிலையில் தொழிலை விரக்தியடைய செய்ய பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழிலில் ராஜாவுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் ராஜாவுக்கு பணம் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் ராஜா தனது மனைவியிடம் அவமானங்களை சந்திப்பதைவிட ஒரேடியாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பேசியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட மனைவி கனகதுர்க்கா நாம் இருவரும் இறந்து விட்டால் மகன் ஆதரவற்று இருப்பான் என்று கருதி மகனையும் கொலை செய்ய முடிவெடுத்தனர். இந்நிலையில் தம்பதியினர் தனது ஒரே மகனை கழுத்து நெரித்துக் கொன்றுவிட்டு அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இவ்வாறு தம்பதியினர் தற்கொலை செய்வதற்கு முன் ராஜா, தனது தம்பி தினேஷ் என்பவருக்கு செல்போன் மூலம் வாய்ஸ் ரெக்கார்டர் அனுப்பியுள்ளார். ஆனால் நள்ளிரவு என்பதால் தினேசால் அங்கு போகாத நிலையில் மறுநாள் சென்றார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பதியினர் மற்றும் அவரது மகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கடன் தொல்லையால் மகனை கொன்றுவிட்ட தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.