பிப்ரவரியில் குரூப்-2 தேர்வுகளும், மார்ச்சில் குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது: குருப் 4 பிரிவில் 5,255 பணியிடங்களுக்கும், குரூப்-2 ஏ பிரிவில் 5831 பணியிடங்களும் காலியாக உள்ளது. 2022ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு வெளியாகி 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும்.
தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும். தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முறைகேடுகளைத் தடுப்பதற்காக விடைத்தாளில் ஒருவரின் தனிப்பட்ட விவரம் தேர்வு முடிந்த பின் தனியாக பிரிக்கப்படும். ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை பார்த்தே பாதி வழியில் விடைத்தாள்களை திருத்தி முறைகேடு நடந்துள்ளதா என்பதை எளிதில் கண்டறிய முடியும்.