ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ‘முன்கூட்டியே பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி மாதத்திற்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Categories