தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை தெரிவித்துள்ளதாவது: “வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.