Categories
உலக செய்திகள்

மக்களே…”சூப்பர் தகவல்”… கொரோனா பரவலை குறைக்குமாம்?… இதோ புதிய அறிமுகம்….!!!

அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹென்றி டேனியல் தலைமையிலான குழு உருவாக்கிய சூயிங் கம் தொடர்பான ஆய்வறிக்கையானது ஒரு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஆய்வாளர் ஹென்றி கூறியதாவது “முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம். இதனையடுத்து அவர்கள் கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரப்பும் நிலையும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சூயிங் கம் உருவாக்கி இருக்கிறோம். கொரோனா தொற்று பொதுவாக மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பிரதி எடுத்து பெருகுகிறது.

ஆகவே பாதிக்கப்பட்டவர் தும்மல் மற்றும் இருமும் போதும், பேசும் போதும் அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்நிலையில் நாங்கள் உருவாக்கியுள்ள இந்த சூயிங் கம் உமிழ்நீரில் உள்ள வைரசை அழிப்பதோடு பரவலை தடுக்கிறது. இதனிடையில் மனித உடலில் சுவாச செல்களில் இருக்கும் ஏசிஇ2 என்ற என்சைம் உடன் கொரோனா வைரசின் முள் பகுதிகள் ஒட்டிக்கொண்டு மனித உடலுக்குள் புகுந்து விடுகிறது.

ஆகவே ஏசிஇ 2 என்சைமை கொரோனா வைரஸ் கரைக்க முடியாதபடி வலுவாக்கினால் மனித உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கலாம். எனவே தாவரத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட ஏசிஇ-2 என்சைம்களுடன் சூயிங் கம் உருவாக்கி இருக்கிறோம். ஏசிஇ2 புரதங்கள் உள்செலுத்தப்பட்ட சூயிங்கம்மால் வாய்வழி குழியிலுள்ள வைரசை செயல் இழக்க செய்ய முடியும். இந்த சூயிங்கத்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களை பாதுகாப்பவர்களுக்கும் இதை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

Categories

Tech |