Categories
மாநில செய்திகள்

டிச.,14-ந் தேதி…. ஒரு நாள் மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் தற்போது கொரோனா வழிகாட்டு பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |