‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அப்டேட்டை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கி இருப்பதாக மாஸ் புகைப்படத்தை பதிவிட்டு சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#VendhuThanindhathuKaadu pic.twitter.com/ln975jOl2J
— Silambarasan TR (@SilambarasanTR_) December 7, 2021