Categories
தேசிய செய்திகள்

ALERT: கிளம்பிருச்சு புதிய புயல்…. வெள்ள அபாய எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

பிரித்தானியாவில் உருவாகியுள்ள பார்ரா புயலின் தாக்கம் செவ்வாய்க்கிழமை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிரித்தானியாவில் பார்ரா புயலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வாளரான Simon Partridge கூறியுள்ளார். அதன்படி புதன்கிழமை வரை மழை மற்றும் பனியுடன் காற்று வீசுவதாக கூறியுள்ளார். மேலும் அயர்லாந்தின் மேற்கு பகுதியில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது ஆகவும் கூறியுள்ளார்.

மேலும் செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விட பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே பயண தடைகள் மின்வெட்டு பனி விழுவதால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள இங்கிலாந்து மக்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள பகுதிகளா Crofty, Swansea Bay and the Gower Coast, Carmarthenshire coast, Pembrokeshire coast, Ceredigion coast between Clarach and Cardigan, North Wales coast போன்றவை உள்ளன.

Categories

Tech |