Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. மத்திய அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மாநிலத்தில் மறுபடியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு சலுகை திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்பும்படி அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதன் மூலமாக 250-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதவி உயர்வு பெற இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் உயர்வும் கிடைக்க இருக்கிறது. ஆகவே எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு பதவி உயர்வு அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற திட்டத்தை மற்ற துறை அரசு ஊழியர்களுக்கும் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |