Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆரும் ,ரஜினியும் வித்தியாசமானவர்கள் -முருகதாஸ்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் முருகதாஸ், ரஜினியை வைத்து இயக்கியது நிலவில் இறங்கியது போன்று உள்ளது என தெரிவித்தார். 

தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய  இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது:

நான் ரஜினியின் மூத்த ரசிகர்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினி என்பர். ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எம்.ஜி.ஆரும் ,ரஜினியும் வித்தியாசமானவர்கள்.  தமிழ், ஹிந்தி என அனைத்துவித நடிகர்களிடமும் ரஜினியின் சாயல் உள்ளது. தலைவரின்  ரசிகர்கள், என்னுடைய ரசிகர்கள் இல்லை. ஏனெனில் நானே ரஜினியின் ரசிகன்.

குழந்தைகளுக்கு நிலவை காட்டி உணவு ஊட்டுவார்கள். ஆனால், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போன்றுள்ளது என முருகதாஸ் தெரிவித்தார்.

Categories

Tech |