Categories
தேசிய செய்திகள்

“வெளியில் சொன்னால் பெயிலாக்கிடுவேன்”… மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

செய்முறை தேர்வு என கூறி அழைத்துச்சென்று கிச்சடி யில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் “துஷ்பிரயோகம்” செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் 10-வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18-ஆம் தேதி பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பள்ளி மேலாளர்கள் 2 பேரும் அந்த உணவுகளை தூக்கி எறிந்ததோடு, போதை மருந்து கலந்த கிச்சடி உணவை மாணவிகளுக்கு சாப்பிடக் கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் தேர்வில் தோல்வி அடைய செய்ததாகவும், குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும் மாணவிகளுக்கு அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்துபோன அந்த மாணவிகள் பெற்றோர்களிடம் எதுவும் கூறவில்லை. அதன்பின் மறுநாள் அந்த 17 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை. இதனைத்தொடர்ந்து மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த கொடூரமான செயலில் பள்ளி மேலாளர்கள் யோகேஷ் குமார், அர்ஜுன் சிங் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விரைவில் மேலாளர்கள் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முசாபர்நகர் காவல் அதிகாரி அபிஷேக் யாதவ் கூறியதாவது ” இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் விரைவில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்படுவார்கள். அதுமட்டுமின்றி இந்த வழக்கில் காவல்துறையினர் அலட்சியம் காட்டினார்களா என்பதை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்

Categories

Tech |