Categories
அரசியல்

அன்னபோஸ்ட்டாக தேர்வு …! ஓ.பி.எஸ் இ.பி.எஸ் குஷி ..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமைப் பொறுப்புக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்களும் பெறப்பட்டன. இந்த நிலையில் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என ஓமப்பொடி பிரசாந்த் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 4ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

நாளை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிமுக விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இமேஜ் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தேர்தல் ஆணையர் பொன்னையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்க தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

அதிமுக தலைமை பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறவிருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் சட்டப்படி நடைபெறவில்லை என்பதால் இந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி அதிமுக ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதோடு, இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கமாறும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், கூறியிருந்தார். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. தொடர்ந்து கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Categories

Tech |