வடமாநிலங்களில் நடப்பாண்டில் கோதுமை மற்றும் நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் நடப்பாண்டு பருவத்தில் இதுவரையில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு கோதுமை பயிரிடப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோன்று நெல் பயிரிடும் பரப்பு 8.5 லட்சம் பேரில் இருந்து 10 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளதாகவும் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பு குறைந்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.