காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் இவர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். தற்போது, இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.