Categories
உலக செய்திகள்

பாம்புகளை விரட்டி அடிக்க சொந்த வீட்டை கொளுத்திய ஓனர்….. பரபரப்பு சம்பவம்…..!!!!

அமெரிக்காவில் பாம்பு வீட்டிற்குள் வந்ததால், 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டை கொளுத்தி நாசம் செய்துள்ளார் வீட்டின் உரிமையாளர்.

அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர், தன் வீட்டிற்குள் பாம்பு நுழைவதை கண்டுள்ளார். அந்தப் பாம்பை புகையை வைத்து விரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்த புகை தீயாக மாறி அவரது வீட்டையே எரிந்துள்ளது. இதனால் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடு எரிந்து சேதமடைந்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 75 தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

வீட்டின் உரிமையாளர் பாம்புகளை விரட்ட புகையை பயன்படுத்தியபோது, அருகில் நிலக்கரி இருந்துள்ளது. அந்த நிலக்கரி தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக பெரும் தீவிபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் சேதம் அடைந்து உள்ளது. 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு எரிந்து சேதம் அடைந்தாலும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |