உலகின் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கிவிட்ட நிலையில், ஜெர்மனியில் ஒரு தம்பதி 444 கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து உலக சாதனை படைத்துள்ளனர்.
இத்தாலியில் இருக்கும் மிலன் நகரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கப்பட்டது. எனவே, அங்கிருக்கும் தேவாலயத்தின் அருகில் சுமார் 24 மீட்டர் உயரம் கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளனர். அம்மரத்தில், சுமார் 80,000 எல்இடி விளக்குகள் மற்றும் 800 பலூன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதனோடு சேர்ந்து தேவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் அந்நகரையே ஜொலிக்க செய்கிறது. இதனிடையே ஜெர்மன் நாட்டில் ஒரு தம்பதி கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள். அதன்படி, வெவ்வேறான வகையில் சுமார் 444 கிறிஸ்துமஸ் மரங்களை ஒரே இடத்தில் அமைத்திருக்கிறார்கள்.
வீடு முழுக்க கிறிஸ்துமஸ் மரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, காண்போரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இதேபோல அமெரிக்காவில் இருக்கும் மைனே மாகாணத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பனிச்சறுக்கு விளையாடினார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த அனைவரும் பூங்காவில் ஒன்றாக கூடி விளையாடி மகிழ்ந்தது மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.