Categories
உலக செய்திகள்

உத்திரபிரதேசத்தில் மாயமான சிலை…. லண்டனில் ஏலம் விடப்பட்டதா….? வெளியான தகவல்…!!

உத்திரபிரதேசத்தில் மாயமான யோகினி சிலை லண்டனில் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் லோகாரி என்னும் கிராமத்தில் ஆட்டுத் தலையுடன் சேர்ந்த யோகினி என்ற அம்மன் சிலை இருந்தது. அதனை, பழங்கால இந்திய மக்கள், வழிபட்டனர். அப்போது, அந்த சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டது. அதன் பிறகு அந்த சிலை கிடைக்கவில்லை.

இந்நிலையில், அச்சிலையை பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஏலம் விட்டபோது, அது இந்திய சிலை என்று கண்டறியப்பட்டது. எனவே, தற்போது யோகினி சிலையை இந்தியாவிற்கு அனுப்புவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |