இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் என்பது கட்டாயமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் அரசின் மானியம் மற்றும் உதவித்தொகை போன்ற எதுவுமே கிடைக்காது. தற்போதைய காலகட்டத்தில் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அனைத்து சேவைகளையும் நீங்கள் பெற முடியும். அந்த அளவுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரயிலில் பயணம் செய்வது முதல் தடுப்பூசி வரை ஆதார் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இப்படி முக்கியமான ஆவணமாக கருதப்படும் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால், கவலை வேண்டாம். வெறும் பத்தே நிமிடத்தில் உங்களுக்கு ஆதார் கார்டு கிடைத்துவிடும். இதற்கு எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்யலாம்.
முதலில் ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/. என்ற வெப்சைட்டில் சென்று Download Aadhaar –>> Get aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு தோன்றும் திரையில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். ஆதார் நம்பர் இல்லாவிட்டால் 16 இலக்க விர்ச்சுவல் ஐடி நம்பரை பதிவிட வேண்டும்.
இதன் பிறகு செக்யூரிட்டி கோடு நம்பரைப் பதிவிட்டு ‘send OTP’ கொடுக்க வேண்டும்.
உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு ‘verify and download’ கொடுக்க வேண்டும்.
இப்போது ஸ்கீரினில் தோன்றும்‘Preview Aadhaar Letter’ என்பதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த டிஜிட்டல் ஆதார் கார்டை நீங்கள் PDF வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.