அனைத்து பென்ஷன் திட்டங்களைக் காட்டிலும் அடல் பென்சன் யோஜனா திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதம் 1000 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் கிடைக்கும் என அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பயனாளியின் முதலீட்டில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 1,000 ரூபாயை அரசு வழங்கி வருகிறது. இதற்கு நீங்கள் வருமான வரி செலுத்தாதவராக இருக்க வேண்டும். மேலும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயனாக இருக்கக் கூடாது. இந்திய குடிமக்களின் 18 வயது முதல் 40 வயது வரையிலான அனைவரும் இதில் முதலீடு செய்ய முடியும்.
ஒவ்வொரு மாதமும் 42 ரூபாய் முதலீடு செய்தால் பிற்காலத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். 82 ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2000 பென்ஷன் கிடைக்கும். 126 ரூபாய் முதலீடு செய்தால் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். மாதம் 168 ரூபாய் முதலீடு செய்தால் நான்காயிரம் ரூபாய் பென்ஷன். மாதம் 5 ஆயிரம் ரூபாய் அல்லது ஆண்டுக்கு 60,000 ரூபாய் பென்ஷன் கிடைக்க வேண்டுமெனில் தினமும் 7 ரூபாய் சேமிப்பு முதலீடு செய்தால் போதும். அதாவது மாதம் 210 ரூபாய் முதலீடு செய்தால் ஐந்து ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.