Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு…. காலிப்பணியிடங்கள், தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி…. முழு விவரம் இதோ…!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான 2022ஆம் வருடாந்திர கால அட்டவணைப்படி வருகிற மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக அரசுத் துறை சேர்ந்த ஒவ்வொரு பதவிகளுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப்-4 வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது வரை நிலவி வந்த கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் திட்டமிட்டபடி போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அட்டவணையை நேற்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அந்த வகையில் தற்போது குரூப் 4 பிரிவில் காலியாக இருக்கும் சுமார் 5855 பணியிடங்களுக்கு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சொந்த மாவட்டத்துக்குள்ளே வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. இப்போதுகுரூப் 4  மற்றும் விஏஓ தேர்வுகாக காத்திருக்கும் தேர்வர்களுக்கான பாடத்திட்டம், வயதுவரம்பு, கல்வித்தகுதிகள் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பதவிகள்:

  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  • தட்டச்சர் (Typist)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  • கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
  • வரித் தண்டலர் (Bill Collector)
  • நில அளவர் (Field Surveyor)
  • வரைவாளர் (Draftsman)

கல்வித்தகுதி:

  • குரூப் 4 தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
  • கூடுதலாக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்,
  • அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரையும், பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரையும் சலுகை கொடுக்கப்படுகிறது.
  • தவிர மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:

  • எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்ட இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.
  • இதில் கேட்கப்படும் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
  • தேர்வுக்கான அனைத்து வினாக்களும் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும்.

பாடத்திட்டம்:

  • மொழி பாடப்பிரிவில் தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • தொடர்ந்து 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும்.
  • பொது அறிவு பிரிவில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் போன்றவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

பணி முறை:

இந்த எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
பிறகு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

Categories

Tech |