தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து தகவல் அனுப்பும் படி காவல்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு அருகில் நடக்கும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அனைத்து காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மண்டலா ஐஜிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.