சமாஜ்வாடி கட்சியினர் ஊழல் செய்வதற்காகவே ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியையை “சிவப்புத் தொப்பியை பார்த்தால் உஷாரா இருங்கள். சிவப்புத் தொப்பி என்றாலே ரெட் அலர்ட் என்று அர்த்தம். இவர்கள் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருக்கின்றனர். இவர்களிடம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் அடித்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியினர் சிவப்புத் தொப்பி அணிவது வழக்கம் ஆகும். அதைத்தான் மோடி இப்படி ஜாலியாக கேலி அடித்து பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலமான கோரக்பூரில் நடந்த கூட்டத்தில் மோடி பங்கேற்றுக்கொண்டு பேசியதாவது “சிவப்புத் தொப்பி ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறது. மேலும் தீவிரவாதிகளிடம் இறங்கிப் போக ஆசைப்படுகிறார்கள். சிறையில் இருப்பவர்களை விடுவிக்க துடிக்கிறார்கள். அவர்களுக்கு உங்களின் வலி மற்றும் பிரச்சினைகள் புரியாது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவை ஆட்சியை கைப்பற்றுவதுதான்.
ஏனென்றால் ஊழல் புரிவது, அவர்களது கஜானாவை நிரப்புவதற்கு, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வதற்கு மற்றும் மாபியா கும்பலை விடுவிக்கவும்தான். கொரோனா காலத்தில் கூட அவர்கள் உங்களுக்காக உதவ வரவில்லை. ஆனால் தங்களது அரசு இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட வண்டி போன்று எந்தத் தடையும் இல்லாமல் செயல்படக் கூடியது. இந்த அரசின் முக்கிய நோக்கமானது வளர்ச்சி மட்டுமே ஆகும்” என்று மோடி கூறினார். இந்தக் கூட்டத்தின்போது கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல முக்கியத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
உத்தரப் பிரதேச சட்டசபைக்கு அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இப்போதே அங்கு தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பித்து விட்டது. இந்த முறை சமாஜ்வாடி கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதனிடையில் மற்றொருபுறம் பாஜகவோ ஆட்சியைத் தக்க வைக்க கவனமாக இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு மாறி மாறி பல்வேறு திட்டங்களை அறிவித்தும், தொடங்கியும் வருகின்றனது. பிரதமர் மோடி உ.பி தேர்தலில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மேலும் மோடி அடிக்கடி உபிக்கு வந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் நொய்டாவில் பிரமாண்ட விமான நிலையத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.