உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கவேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை; இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் ” என்று அதில் அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.
Categories