ஐக்கி பெர்ரி இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி. இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஜில்லா, மரியான் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதனையடுத்து, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆனவர் பாடகி ஐக்கி பெர்ரி. இந்நிலையில், இவர் இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.