Categories
தேசிய செய்திகள்

“குழந்தைகள் கூட தவறை திருத்தி கொள்வார்கள்”…. உங்கள நீங்களே திருத்திக்கோங்க…. எம்.பி.களை எச்சரித்த பிரதமர் மோடி….!!!!

டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் வைத்து பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கட்சி எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இதனை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது. குழந்தைகளிடம் ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டினால் அதை மீண்டும் அவர்கள் செய்வதில்லை. எனவே கட்சி எம்பிக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |