அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் டிரைலர் அதிரடியாக வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார்.
இந்நிலையில் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த அதிரடி டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.