சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில், புகையிலை பொருட்கள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 35 மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.