கோயம்புத்தூர் சரவணப்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் மதுபான கடையில் இருந்த பெட்டியில் சாரை பாம்பின் குட்டி 1 இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சரவணம்பட்டியில் தமிழக அரசின் மதுபான கடை ஒன்று உள்ளது அங்கு உயர் ரக மது பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று கடையில் பணியில் இருந்த ஊழியர்களில் ஒருவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டியைத் திறந்து உள்ளார் அப்போது பெட்டிக்குள் சாரை பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தைரியமாக பெட்டிக்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்துள்ளார். பின்னர் டாஸ்மாக் ஊழியர்களே அந்த பாம்பினை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.