Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கொடூர கொலை” உயிரை பறித்த வாட்சப் வதந்தி……… கோவையில் பரபரப்பு…..!!

கோவையில் வெறும் வாட்டசாப் வதத்ந்தி ஒருவரின் உயிரையே எடுத்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே கடந்த மூன்றாம் தேதி காயங்களுடன் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது.

வாட்ஸாப்ப் வதந்தி :

சண்முகத்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் பணத்தை  விரைவாக மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே வதந்திகள் பரவி வருகின்றன.

அறியாமையால் வந்த வினை:

இது உண்மையா என்பதை அறிய சுந்தராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளைக்கு விற்பனை மேலாளராக பணியாற்றி வந்த பணியாளரை அணுகி சண்முகம் விசாரித்துள்ளார். அவரின் அறியாமையை பயன்படுத்தி கொண்ட அவர் அந்த செய்தி உண்மைதான் என்றும், பணத்தை கொடுத்தால் 15 முதல் 20 சதவிகித கமிஷனுக்கு அதனை மாற்றி தருவதாக கூறியதாக தெரிகிறது.

ஏமாற்றம் :

அதனை உண்மை என நம்பிய சண்முகம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றித்தருமாறு கூறியுள்ளார். அப்பொழுது அவருடைய நண்பர்களிடமும் 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் வாங்கி தருமாறும்  அதனை கமிஷன் அடிப்படையில் மாற்றி தருவதாகவும் கூறியுள்ளார். அதனை சண்முகம் தன் நண்பர்களிடம் தெரிவிக்க அவர்களில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி வதந்தி என்ற உண்மையை எடுத்துக் கூறியுள்ளார்.

கொலை செய்ய திட்டம் :

அதிர்ந்துபோன சண்முகம் சண்டையிட்டு பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து சண்முகத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்த வங்கி பணியாளர் அவரை ஈசனார் டாஸ்மாக் கடைக்கு வர வழைத்து கூட்டாளிகள் 4 பேரை அடித்துக் கொலை செய்து முட்புதரில் வீசி சென்றது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது மற்றும்  எச்சரிக்கை :

இதனை தொடர்ந்து கொலை தொடர்பாக சதீஷ் மகேஷ் மதுசூதன ஆகிய மூவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை ஆராயாமல் நம்பக்கூடாது என்று கூறும் காவல்துறையினர் பணம் கொடுக்கும் வாங்கும் விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |