ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை தொடங்குகிறது . இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் விலகியுள்ளார்.தசைப்பிடிப்பு காரணமாக முதல் டெஸ்டில் அவர் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .