Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்…. வாலிபர் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

மீனவரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ஆறுமுகக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இப்பகுதியில் நாகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகக்கனியும் நாகசாமியும்  ஒரே தொழில் செய்து வருவதால் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தனது தொழிலுக்காக நாகசாமி ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி அதனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகசாமிக்கு கடன் கொடுத்தவர் அடிக்கடி நெருக்கடி கொடுத்ததால் ஆறுமுகக்கனி பணம் ஏற்பாடு செய்து கடனை அடைக்க உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த வழியாக வந்த நாகசாமி, சக்திவேல் ஆகியோரிடம் ஆறுமுகக்கனி நான் பணம் வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளேன். ஆனால் சக்திவேல் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வருவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல், நாகசாமி இருவரும் ஆறுமுகக்கனியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகக்கனி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூரங்குடி காவல்துறையினர் சக்திவேலை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |