தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற 27மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகின்றது. வேட்புமனு தாக்கல் செய்யவதற்கான இறுதி நாள் டிசம்பர் 16ம் தேதி ஆகும். இதையடுத்து டிசம்பர் 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மேலும் இந்த வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் வரும் 19ம் தேதி ஆகும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ல் நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை. அதனால் ரஜினிகாந்தின் பெயரையோ,புகைபடத்தையோ தேர்தலில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்தி வாக்குகளை சேகரித்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடபட்டுள்ளது.