Categories
உலக செய்திகள்

நாங்க போட்டிக்கு வரல…. பகிரங்கமாக தெரிவித்த அமெரிக்கா…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

அமெரிக்கா சில முக்கிய காரணங்களால் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் சின்சியாங் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் மீது சீனா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த காரணத்தாலும், இன படுகொலையினாலும் அமெரிக்கா சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி சர்வதேச ஒலிம்பிக் கழகம், உலக நாடுகள் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்புவதும் அனுப்பாததும் அவர்களது சொந்த விருப்பம் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் மேல் குறிப்பிட்டுள்ள செயலுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |