மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 19 வயது வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.