Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கிரையம் செய்து கொடுத்தேன்” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலவைத் தொழிலாளி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சலவை தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அன்பரசு என்ற மகன் இருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு மனையில் வீடு கட்டுவதற்காக ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரை சக்திவேல் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தன்னுடைய பெயருக்கு இடத்தை கிரையம் செய்து கொடுத்தால்தான் கடன் தரமுடியும் என ஜவுளிக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுக் கொண்டு தனது இடத்தை சக்திவேல் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த கடன் தொகையை செலுத்தி முடித்த பிறகும் ஜவுளிக்கடை உரிமையாளர் நிலத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சக்திவேல் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். அதன்பிறகு தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் சக்திவேலை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |