ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சார்பாக ஊழியர்களின் நலனிற்காக சிறப்பு திட்டங்களும், வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் முக்கியமான ஒரு திட்டம் தான் டெபாசிட் இணைப்பு காப்பீட்டுத்திட்டம். இந்தத் திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் ஆகும். தொழிலாளரின் மரணத்தின் போது நாமினி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னால் குறைந்தபட்சம் ரூபாய் 2 லட்சமும் அதிகபட்சம் ரூபாய் 6 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சினையையடுத்து இந்த காப்பீட்டு பணம் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாயும், அதிகபட்சம் 7 லட்சம் ரூபாய் எனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பிஎஃப் சிறப்பு டெபாசிட் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணம் எதுவும் செலுத்தாமல் அதிகபட்சம் 7 லட்சம் ரூபாய் வரை பயனடைய முடியும்.
பிஎஃப் அமைப்போடு இணைக்கப்பட்ட எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும், ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். தொழிலாளரின் மரணத்திற்குப் பின்னர் நாமினி அல்லது குடும்ப உறுப்பினருக்கு இந்த தொகை வழங்கப்படும். அவர் இறப்பதற்கு முன் தொடர்ந்து 12 மாதங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வெவ்வேறு நிறுவனங்களாக கூட இருக்கலாம். மேலும் இந்த தொகையானது நாமினி அல்லது வாரிசுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கு இருக்கு அனுப்பப்படும். இதில் குறிப்பாக இந்த திட்டத்தில் உதவி பெறுவதற்கு பிரீமியம் தொகையோ அல்லது டெபாசிட் தொகையோ எதுவும் செலுத்த தேவையில்லை. குறைந்தப்பட்ச இன்சூரன்ஸ் பணம் 2.5 லட்சம் ரூபாயும், அதிகபட்சம் 7 லட்சம் ரூபாயும் ஆகும்.