Categories
மாநில செய்திகள்

டிச. 21ம் தேதி முதல்….  TNPSC புதிய அறிவிப்பு….! ரெடியா….?

நேற்று காலை 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதில் குரூப்-2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் காலி பணியிடங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர், அலுவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 27 முதல் 30 வரையும், ஜனவரி 4 முதல் 6 ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்காணலுக்கு உரிய நாட்களில் உரிய நேரத்திற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |