Categories
மாநில செய்திகள்

இன்று இங்கெல்லாம் `மின்தடை’ அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க…..!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று 08.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, இரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி, ரோடு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, குப்புசாமி காலனி, ஆதம்பாக்கம் அலுவலர் காலனி, ஏரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் துணை மின் நிலையம் மற்றும் மீன் பாதைகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால் நீரிலிருந்து மின்சாரம் பெறும் நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பணங்குடி, ராசா கருப்பூர், மூல மங்கலம், விசலூர், மூங்கில் குடி காக்கா, கோட்டூர், ஆனைகுப்பம், மாப்பிள்ளை குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ் குடி சிகார்பாலையம் நாடா குடி வீதிவிடங்கன் பூங்குளம் ,புளிச்சகாடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி , ஆதலையூர், பாக்கம், கோட்டூர் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திருவாரூர் அருகே நீலக்குடி துணை மின் நிலையம் மற்றும் மின் பாதைகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் நன்னிலம், நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழதஞ்சாவூர், பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழைய வளம், திருவாதிரை மங்கலம், சேந்தமங்கலம், பெரும் புகழூர், திருப்பயத்தங்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின்நிலையம் பகுதிக்குட்பட்ட ஜீ டிவி மின் பாதைக்குட்பட்ட பகுதியில் உயர் மின் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதை களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் பூலாங்கிணறு , சின்னபூலாங்கிணறு புறநகர், பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.

Categories

Tech |