ஒமைக்ரான் தொற்று குறித்து விஞ்ஞானி ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றினால் அனைவரும் பீதியடைந்துள்ளனர். இது தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானியான அந்தோனி பாசி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவக்கூடியது.
இருப்பினும் இது கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை விட தீவிரமானது அன்று. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டாலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. குறிப்பாக உயிரிழப்புகள் அதிகமாக இருக்காது” என்று கூறியுள்ளார்.