Categories
உலக செய்திகள்

400 க்கு பதிலாக 1,500 க்கும் மேலான கைதிகள்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. வெளியான முக்கிய தகவல்….!!

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்தது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடாக புருண்டி உள்ளது. இந்த புருண்டியிலுள்ள கிடேகா என்னும் நகரில் 400 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. ஆனால் இந்த சிறைச்சாலையில் சுமார் 1500 க்கும் மேலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அளவுக்கு அதிகமான கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாலேயே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |