Categories
தேசிய செய்திகள்

“வேற லெவல் யோசனை”…. மாட்டு சாணத்தில் செருப்பு…. அசத்தலான கண்டுபிடிப்பு…. வைரல்….!!!!

ராய்ப்பூரை சேர்ந்த கால்நடை மேய்ப்பர் ஒருவர் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கால்நடை மேய்ப்பர் ரித்தேஷ் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு மாட்டுச் சாணத்தில் ரித்தேஷ் அகர்வால் தயாரிக்கும் செருப்பானது தண்ணீர் நனைந்தாலும் கெட்டுப் போகாது என்று கூறியுள்ளார்.

இதில் ஒரு ஜோடி செருப்பின் விலை 400 ரூபாய் ஆகும். இதுபோன்று மாட்டு சாணத்தில் தயாரிக்கக்கூடிய செருப்பை நீங்கள் போட்டுக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு நன்மை உருவாகும் என்று ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விவரங்களை ரித்தேஷ் அகர்வால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரிதேஷ் அகர்வால் பதிவிட்டுள்ள இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |