Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! புதிதாக பயிர்க்கடன் அறிவிப்பு…. உடனே போங்க…!!!!

புதிதாக பயிர்க்கடன் தேவைப்படும் விவசாயி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை நாடி பயன்  பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.லெட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் குறுகியகாலப் பயிர் கடன் வழங்கப்படவுள்ளது. இந்த வருடம் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்க 70 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை ரூ.43.22 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே புதிதாக பயிர் கடன் தேவைப்படும் விவசாயிகள் தகுதியான ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வந்து உடனடியாக பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |