உக்ரைனை ரஷ்யா கைப்பற்றினால் கிழக்கு ஐரோப்பிய பகுதிக்கு தங்களது படையினர் கூடுதலாக அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதாவது “உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வங்கியில் ஐரோப்பியப் பிராந்தியத்தில் உள்ள நேட்டோ ராணுவம் நிலைகளில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படும். மேலும் ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கும். இதைத்தவிர எதிர்காலத்தில் நேட்டோ கூட்டணியில் உக்ரைனை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் ஜோ பைடன் உரையாடினார். இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி உரையாற்றினார். அப்போது ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று ஸெலென்ஸ்கியிடம் பிளிங்கன் உறுதியளித்தார்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உக்கிரன் மீது படையெடுத்து கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அச்சம் தெரிவித்தது. இதனிடையில் உக்ரைனை கைப்பற்றுவதற்காக 1.75 லட்சம் வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும், ஏற்கனவே 1 லட்சம் ரஷ்ய படையினர் பல்வேறு உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரஷ்யா, உக்ரைன்தான் கிளர்ச்சியாளர்கள் பகுதி கட்டுப்பாடு எல்லை அருகே படைகளை குவித்து வருவதாகவும் அது கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறது.