Categories
தேசிய செய்திகள்

WOW: வந்தாச்சு புது அப்டேட்…. இனி செம மாஸ் தான்…. இணையத்தையே கலக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டா….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு புதிய அப்டேட்கள் வெளியாகி கொண்டிருப்பதால்,வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயனாளர்களை வெகுவாக கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் வாட்ஸ் அப் பயனர்களுக்கு  உரையாடல்களை 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் ஆகிய கால அளவுகளில் தானாகவே அழிக்கும் வகையில் புதிய ஆப்ஷன் வசதி கொண்டு வந்துள்ளது. அதனைப்போலவே இன்ஸ்டாகிராம் நிறுவன பயனாளிகளுக்கும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது பயனர்கள் தங்கள் செயலில் அதிக நேரம் செலவிடுவது குறைக்கக் கூடிய வகையில் 20 நிமிட இடைவெளியில் நினைவூட்டப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |