தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் பிறகு இன்று வடகிழக்கு பருவக்காற்று காரணமாக கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான வளர்ச்சி வாய்ப்புள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.