Categories
தேசிய செய்திகள்

ரயில்வே தேர்வு…. தவற விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்காக ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் இதற்காக மண்டல வாரியாக 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் காலியாக உள்ள பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை மற்றும் பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு போன்ற பணிகளுக்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்காக பல லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

ஆனால் விண்ணப்பத்தில் தவறுதலாக போட்டோ மற்றும் கையொப்பம் உள்ளிட்ட தவறுகள் இடம்பெற்றதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த விண்ணப்பதாரர்களுக்கு மேலும் ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட ரயில்வே தேர்வாணைய இணைய தள பக்கத்தில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி ஒரு இணையத்தள இணைப்பு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் போட்டோ மற்றும் கையெழுத்து உள்ளிட்ட தவறுகளை தங்கள் விண்ணப்பத்தின் திருத்திக் கொள்ளலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை அரிய ரயில்வே தேர்வாணைய இணைய தளத்திற்குச் சென்று பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம். ஏற்கனவே உங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருந்தால் நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது ரயில்வே தேர்வாணையம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் வரும் அதிகாரபூர்வமற்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |