Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 2 நாட்களுக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் பிறகு இன்று வடகிழக்கு பருவக்காற்று காரணமாக கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |