இரு குழந்தைகளைகளுக்கு தாயானவளை திருமணம் செய்ததோடு அதில் ஒரு குழந்தையை அடித்தே கொன்ற நபர் கைது .
சென்னை பள்ளிக்கரணை அருகே சீத்தாளப்பாக்கத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் ,அதே பகுதியில் கணவரைப் பிரிந்து 2குழந்தைகளுடன் வசித்த கங்கா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் கங்காவை திருமணம் முடித்துக்கொண்டு ஒன்றாக வசித்து வந்தார் வெங்கடேஷ் .சில நாட்களுக்கு முன் கங்கா தன் 3வயசு மகனான அருணை வெங்கடேஷிடம் விட்டு விட்டு கேரளாவில் சகோதரி வீட்டில் வசிக்கும் இன்னொரு மகளை பார்க்கச் சென்றுள்ளார் .
இந்நிலையில் குழந்தை சாப்பிடும் பொது மயங்கி விழுந்ததாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.அப்போது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்ததால் அவர் தப்பி ஓட்டு விட்டதாக கூறப்படுகிறது .இதனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததை அறிந்து சென்னை திருப்பிய கங்கா வெங்கடேசன் மீது போலீசில் புகார் அளித்தார் .இதன் பேரில் குழந்தையை அடித்துக் கொன்றதாக போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர் .மேலும் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் .