செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஹில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேளம்பாக்கம் சுஹில் ஹரி பள்ளியில் உள்ள பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.